Close

தொழில் வணிகம்

  1. இம்மாவட்டத்தின் சமூக- பொருளாதார வளர்ச்சியின் முக்கியத்துவம்
  2. தொழில் அமைவு புலங்கள்
  3. தொழில் வளர்ச்சிக்கான உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சூழல்
  4. இணையவழி குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் பதிவேற்றம்
  5. தொழிற்பேட்டைகள்
  6. மதுரை மாவட்டத்தில் புதிதாக துவங்க உள்ள தொழில்களுக்கான சாத்திய கூறுகள்
  7. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சிக்கு மாவட்ட தொழில் மையத்தின் சீரிய பணிகள்
  8. நடுவண் அரசின் உதவி திட்டங்கள்
  9. பல்வகை சுயதொழில் கடன் திட்டங்கள்
  10. மண்டல சோதனை ஆய்வுக் கூடம், கோ.புதூர், மதுரை
  11. மின் மற்றும் மின்னணு வளர்ச்சி மற்றும் பயிற்சி மையம், மதுரை
  12. தொழிற் கூட்டுறவு பிரிவு

இம்மாவட்டத்தின் சமூக- பொருளாதார வளர்ச்சியின் முக்கியத்துவம்

மதுரை மாவட்டத்தில் ஜவுளி, ஆயத்த ஆடைகள், பேக்கரி மற்றும் பூக்கள்,பால் பொருட்கள், குளிர்சாதன கிடங்குகள், வேளாண் மற்றும் மூலிகை பொருட்கள் ஜல்லி உற்பத்தி, செங்கற்கள், ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் அமைந்துள்ளன. மேலும், புதிதாக உணவு பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் மற்றும் வேளாண் பொருட்களை மூலப்பொருட்களாக கொண்டு உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

தொழில் அமைவு புலங்கள்

மதுரை மாவட்டத்தில் இயங்கி வரும் உற்பத்தி தொழிற்சாலைகள்
வஎண் உற்பத்தி செயல்பாடுகள் நிறுவனங்களின் எண்ணிக்கை
1 உணவு மற்றும் உணவு சார்ந்த பொருட்கள் 5229
2 காட்டன் ஜவுளிகள் உற்பத்தி 262
3 பனியன் மற்றும் ஆயத்த ஆடைகள் 3827
4 மரசாமான்கள் தயாரித்தல் 1318
5 காகிதம் மற்றும் அச்சு சார்ந்த பொருட்கள் 4372
6 தோல் பொருட்கள் உற்பத்தி 292
7 ரப்பா் மற்றும் பிளாஸ்டிக் 1815
8 இரசாயன பொருட்கள் தயாரிப்பு 756
9 உலோகம் அல்லாத பொருட்கள் மற்றும் ஜல்லி தயாரிப்பு 510
10 உலோக பொருட்கள் 128
11 உலோகங்களை மூலப்பொருட்களாக கொண்டு தயாரிக்கும் நிறுவனங்கள் 4810
12 மின் மற்றும் மின்னணு தொழில்கூடங்கள் 398
13 இயந்திரங்கள் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் 1577
14 போக்குவரத்து தளவாடங்கள் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் 28
15 இதர நிறுவனங்கள் 6145
16 தனிநபர் சேவை நிறுவனங்கள் 224
17 தனிநபர் சேவை மற்றும் வியாபார நிறுவனங்கள் 55
18 பழுதுநீக்கம் செய்யும் நிறுவனங்கள் 800
மொத்தம் 32546

தொழில் வளர்ச்சிக்கான உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சூழல்

மாவட்டத்தில் தொழில் முன்னேற்றம் மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை சமநிலைப் படுத்தும் பொருட்டு தொழிற்கூடங்கள் அமைக்க அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன. மாவட்டத்தில் வருடாந்திர கடன் திட்டம் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் புதுமையான மற்றும் உயர்தொழில்நுட்பங்களைக் கொண்டு வேளாண்மை மற்றும் தோட்டப்பயிர்கள், பால்பொருட்கள் மற்றும் சிறுதொழில் நிறுவனங்கள் துவங்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.சமூக பொருளாதார முன்னேற்றத்தில் போக்குவரத்து நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. மாவட்டத்தில் சாலை வசதி, இருப்புப் பாதை வசதிகள், மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளையும் இணைக்கும் விதத்தில் அமைந்துள்ளது. மேலும், தொலைதொடர்பு வசதிகளும் சிறந்த முறையில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தொழில்சாலைகள் மற்றும் மக்களுக்கு தேவையான தண்ணீர் வசதிகள் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மாவட்டத்தில் 37 வங்கிகள் அவற்றின் கிளைகளுடன் தொழிற்சாலைகள் மேம்பாட்டிற்கு சிறந்த முறையில் பணியாற்றி வருகின்றன. கீழ்கக்ண்ட தொழிற்சாலைகளுக்கு வங்கிகள் கடனுதவி வழங்கி வருகின்றன.

  1. அதிக வருவாய் ஈட்டும் சாத்தியமுள்ள தொழிற்கூடங்கள்
  2. பின்தங்கிய மற்றும் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் உள்ள மக்களின் பொருளாதார முன்னேற்றம்

இணையவழி குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் பதிவேற்றம்

மத்திய அரசு ஜனவரி 2016 மாதத்தில் வெளியிட்ட தொழில் கொள்கையின்படி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான பதிவுகள் இணையதளத்தின் மூலமாக மட்டுமே செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 32546 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. இணையதளத்தின் மூலமாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பதிவு செய்ய ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்குப் புத்தகம் ஆகியவை மட்டுமே ஆவணமாக்கப்பட்டுள்ளன.

மதுரை மாவட்டத்தில் இயங்கி வரும் உற்பத்தி தொழிற்சாலைகள்

வஎண் தொழிற்பேட்டை நிறுவனங்களின் எண்ணிக்கை
1 சிட்கோ தொழிற்பேட்டை, கோ. புதூர் 85
2 சிட்கோ தொழிற்பேட்டை, கப்பலூர் 405
3 மதுரை பனியன் தொழிற்பேட்டை, உறங்கான்பட்டி 135
4 மதுரை ஒருங்கிணைந்த ஜவுளிப்பூங்கா வாடிப்பட்டி 24

புதிதாக தொழிற்பேட்டைகள் துவங்க நிலஆர்ஜிதம் செய்திட அம்பலக்காரன்பட்டி, இடையப்பட்டி, சேடப்பட்டி ஆகிய கிராமங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

மதுரை மாவட்டத்தில் புதிதாக துவங்க உள்ள தொழில்களுக்கான சாத்திய கூறுகள்

இம்மாவட்டத்தில் அமைந்துள்ள புவியியல் பரப்பு மற்றும் மேற்கொள்ளப்பட்டுள்ள உட்கட்டமைப்பு வசதிகளை பொறுத்து கீழ்க்கண்ட வகையான தொழில்கள் ஊக்குவிக்கப்படுகின்றன.

வேளாண் மற்றும் உணவுப் பொருட்கள்.

  1. உடனடி உணவுப் பொருட்கள்
  2. பேக்கரி பொருட்கள்
  3. மிட்டாய் வகைகள்
  4. மிளகு மற்றும் ஏலக்காய் எண்ணெய்
  5. ஜாம்கள்
  6. தக்காளி ஊறுகாய் மற்றும் பழச்சாறுகள்
  7. கடலை மிட்டாய்
  8. உலர் பழங்கள் மற்றும் காய்கறிகள்
  9. பால் பொருட்கள்
  10. உருளைக்கிழங்கு சிப்ஸ் மற்றும் வறுத்த முந்திரி பொருட்கள்
  11. ஸ்குவாஷ் மற்றும் பழச்சாறுகள்
  12. காளான் பதப்படுத்துதல்
  13. மல்லிகை பூவிலிருந்து வாசைன திரவியங்கள் தயாரித்தல்
  14. அப்பளம் தயாரித்தல்
  15. குளிர்சாதன கிடங்கு

இரசாயன பொருட்கள் தயாரிப்பு:

  1. சோப்புகள்
  2. பிளாஸ்டிக் பைப் தயாரித்தல்
  3. பிளாஸ்டிக் பொருட்கள்
  4. பைபர் வலுவூட்டப்பட்ட எடைகுறைவான மேற்கூரை தயாரித்தல்
  5. ஒட்டக்கூடிய காகித நாடாக்கள்
  6. பிளாஸ்டிக் கன்டெய்னர் மற்றும் நாற்காலிகள்
  7. ஆட்டோரப்பர் மோல்டட் பொருட்கள்
  8. ரப்பர் பந்துகள்
  9. அட்டைப் பெட்டிகள்
  10. சோப் ஆயில்கள்
  11. சிங்க் சல்பேட்

இயந்திரங்கள் தொடர்பான தொழிற்கூடங்கள்

  1. அலுமினியம் வன்பொருட்கள்.
  2. போல்ட் மற்றும் நட்ஸ்
  3. ரோலிங் ஷட்டர்ஸ்
  4. ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள்
  5. தண்ணீர் தொட்டிகள்
  6. சிறிய ஸ்பிரிங்குகள்
  7. வார்ப்பகங்கள்
  8. பவுடர் பூச்சுகள்

கண்ணாடி, செராமிக் பொருட்கள் மற்றும் கனிமங்கள்

  1. பிரிண்டட் சர்க்யூட் போர்டுகள்
  2. மர்ஜென்சி விளக்குகள்
  3. சிறிய டிரான்ஸ்பார்மர்கள், மற்றும் மின்னணு பொருட்கள்
  4. டிஜிட்டல் கடிகாரங்கள்
  5. ஆட்டோமொபைல்க்கு தேவையான மின்னணு சாதனங்கள்
  6. தொலைகாட்சி சாதனத்திற்கான ஆம்பிளிபயர்ஸ்

ஜவுளிகள்:

  1. உள்ளாடைகள்
  2. ஆயத்த ஆடைகள்

தோல்பொருட்கள்

  1. தொழிற்சாலைகளில் உபயோகப்படுத்தப்படும் கையுறைகள்
  2. கைப்பைகள், பெல்ட்கள்

இதர தொழில்களுக்கான சாத்திய கூறுகள்.

  1. கியர்கட்டிங்
  2. பிளாஸ்டிக் மோல்டிங்
  3. வார்ப்பகங்கள்
  4. நுண்ணிய உதிரிபாகங்கள்
  5. மோட்டார் ரிவைணடிங்.
  6. ஜவுளி நிறுவனங்களுக்கு தேவையான உதிரிபாகங்கள்
  7. பொருட்கள் கையாளும் உபகரணங்கள்
  8. தரமான தோல் பொருட்கள்
  9. டீசல் என்ஜின் உதிரி பாகங்கள்
  10. பைபர் வலுவூட்டப்பட்ட பிளாஸ்டிக பொருட்கள்
  11. எப்ஆர்பி பொருட்கள் மற்றும் இணைப்புகள்.

குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன வளர்ச்சிக்கான மாவட்ட தொழில் மையத்தின் சீரிய பணிகள்.

வேலைவாய்ப்பின்மைக்கு தீர்வு காணவும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன வளர்ச்சிக்காகவும் சுய வேலை வாய்ப்பினை ஊக்குவிப்பதற்காகவும் பொருளாதார ஏற்றதாழ்வுகளை சீர்செய்து சமநிலையை அடைய செய்யவும், மாவட்ட தொழில் மையங்கள் நாடு முழுவதும் 1979 முதல் ஏற்படுத்தப்பட்டுள்ள. சுயவேலை வாய்ப்பு மற்றும் தொழில் வளர்ச்சிக்கான அனைத்து உதவிகளையும் ஓரே குடையின்கீழ் வழங்குவதை மாவட்ட தொழில் மையம் தனது தலையாய பணியாக மேற்கொண்டு செவ்வனே நடைபெற்று வருகிறது. அலுவலக தலைவராக ஒரு பொது மேலாளர் அவர்களும், அவருக்கு உறுதுணையாக நான்கு செயல் மேலாளர்களும், களப்பணியாளர்களும் மற்றும் இதர பணியாளர்களும் பொது மக்கள் நலன் கருதி பணிபுரிந்து வருகின்றனர்.

ஊக்குவிப்பு முகாம்கள்

இம்மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் உள்ள தொழில் முனைவோர்கள்,ஆர்வலர்கள் ஆகியோரை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி அவர்கள் தொழில் தொடங்கி உற்பத்தி நடைமுறைப்படுத்தப்படும் வரை அரசு அமைப்புகளிடமிருந்து பெறவேண்டிய அனைத்து உரிமங்களையும் பெற்று தருவதை ஒரு குழுப்பணியாக மாவட்ட தொழில் மையம், செயலாற்றி வருகிறது.
பல்தொழில்நுட்ப கல்லூரி, தொழிற்பயிற்சி நிலையம், பொறியியல் கல்லூரி மற்றும் அறிவியல் கலைக்கல்லூரி ஆகியவற்றில் பயிலும் இறுதியாண்டு மாணவா;களிடையே சுயவேலை வாய்ப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக அவர்களை வேலைதேடுவோராக அன்றி வேலைவழங்குவோராக மாற்றும் பணியினை இம்மையம் செயல்படுத்தி வருகிறது.

தொழில் நுட்ப தகவல் நூலகம்

தொழில்முனைவோர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் ஆகியோர் பயன்பெறும் பொருட்டு மாவட்ட தொழில் மைய வளாகத்தில் ஏறத்தாழ 1000 தொழில்நுட்ப புத்தகங்களைக் கொண்ட தொழில் நுட்ப தகவல் நூலகம் அனைத்து வசதிகளுடன் இயங்கி வருகிறது. நாள்தோறும் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் தொழில்ஆர்வலர்கள் இந்நூலகத்தை நல்லமுறையில் பயன்படுத்தி வருகின்றனர். தொழில் நிறுவுவதற்கான அனைத்து வழிமுறைகளை உள்ளடக்கிய தொகுப்புகளையும், உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான வழிகாட்டு குறிப்புகளும் இந்நூலகத்தில் இருப்பதால் அனைத்து தரப்பினரும் நூலக பயன்பாட்டினை நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றனர்.

ஒருமுனைத் தீர்வுக்குழு:

இம்மாவட்டத்தில் தொழில் நிறுவனம் அமைக்க விழைவோர்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளை களையும் பொருட்டு மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் மாவட்ட ஒருமுனைத் தீர்வுக்குழு பொது மேலாளர் உட்பட 13 இதர துறை , அமைப்பு அலவலர்களை உள்ளடக்கி செயல்பட்டு வருகிறது. இக்குழுவானது மாதம் இருமுறை கூட்டப்பட்டு தொழில் முனைவோர் கோரும் உரிமம், ஒப்புதல், தடையின்மை சான்று மற்றும் ஆணை ஆகியவற்றை தொடர்புடைய துறைகளிடமிருந்து பெற்ற எளியமுறையில் தொழில் நிறுவனம் அமைத்திட தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய அரசாணையின்படி, ஒருமுனைத்தீர்வுக்குழுவிற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 100 சதவிகிதம் இணையவழியாக விண்ணப்பிக்க வகை செய்யப்பட்டுள்ளது. எனவே, குறிப்பிட்ட காலவரையறைக்குள் தொழில் முனைவோர்களுக்கு தேவையான அனுமதிகள் கிடைக்கப்பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உத்யோக் ஆதார் பதிவு

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் எளியமுறையில் தங்களது நிறுவனத்தை இணையதளதில் பதிவுசெய்து அவர்களாகவே பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்யப்பட்டள்ளது. இதன்மூலம் மின்னிணைப்பு பெறுதல், வங்கி கணக்கு துவக்குதல் ஆகிய பணிகளை எளியமுறையில் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், மேற்கண்ட வரம்பிற்கு கீழ்உள்ள குறைந்த மின்அழுத்த பயனீடு உள்ள இயந்திரமில்லா தொழில்களை குடிசைத் தொழில் மற்றும் கைவினைத் தொழிலாக பதிவு செய்து கொள்ள மாவட்ட தொழில் மையம் உரிய வழிமுறைகளை ஏற்படுத்தி உள்ளது.

பல்வகை மானியங்கள்

வஎண் மானிய வகையின் பெயர் மானிய அளவு தகுதிகள்
1 மூலதன மானியம் இயந்திரம் மற்றும் தளவாடங்களின் மொத்த மதிப்பீட்டில் 25 விழுக்காடு வரையறை செய்யப்பட்ட தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் பதிவு பெற்ற குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்
2 குறைந்த அழுத்த மின்மானியம் உற்பத்தி தொடங்கிய முதல் மூன்று ஆண்டுகளுக்கு நிறுவனம் செலுத்தும் மின்நுகர்வு கட்டணத்தில் 20 விழுக்காடு மின்மானிய தகுதி சான்றிதழ் பெற்ற உற்பத்தி தொழிலில் ஈடுபட்டு வரும் பதிவுபெற்ற தொழில் நிறுவனங்கள்
3 மின்னாக்கி மானியம் மின்னாக்கி இயந்திரத்தின் மொத்த மதிப்பீட்டில் 25 விழுக்காடு உற்பத்தி தொழிலில் ஈடுபட்டு வரும் பதிவுபெற்ற தொழில் நிறுவனங்கள் நிறுவியுள்ள 320 கேவிஏ திறனுள்ள மின்னாக்கி இயந்திர செயல்பாட்டினை பொறுத்தது
4 மதிப்புகூட்டுவரிக்கு ஈடான மானியம் வாடிப்பட்டி இயந்திர தளவாட மதிப்பிற்கு மிகாமல் செலுத்தப்பட்ட மதிப்புகூட்டு வரியில் 6 ஆண்டுகளுக்கு 100 விழுக்காடு மதிப்பு கூட்டுவரி மானிய தகுதி சான்றிதழ் பெற்ற உற்பத்தி தொழிலில் ஈடுபட்டு வரும் பதிவுபெற்ற தொழில் நிறுவனங்கள்

நடுவண் அரசின் உதவித் திட்டம்

கயிறு மானியம்

சுற்றுச்சூழலுக்கு உகந்த கயிறு தொழிலில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களுக்கு, நிறுவனத்தில் நிறுவப்பட்டுள்ள இயந்திரங்களின் மதிப்பிற்கேற்றவாறு வழங்கப்படும் மானியத் தொகைக்கு உரிய பரிந்துரைகள் மாவட்ட தொழில் மையத்தால் வழங்கப்பட்டு மத்திய கயிறு வாரியத்திற்கு அனுப்பப்படுகிறது. கயிறு வாரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்நிறுவனங்களுக்கு மானிய உதவி விடுவிக்கப்பட்டு வருகிறது.

கதர் கிராமத் தொழில் ஆணைய விளிம்புத் தொகை உதவித் திட்டம்

தமிழ்நாடு அரசால் ஊரக பகுதியாக வரையறை செய்யப்பட்ட அமைவிடத்தில் செயல்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில்களுக்கு அவற்றின் திட்ட மதிப்பீட்டில் 25 விழுக்காடு விளிம்பு மானியமாக வழங்கப்பட்டு வருகிறது.

பல்வகை சுயதொழில் கடன் திட்டங்கள்

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடையே நம்பிக்கையை விதைப்பதற்கும் சுயவேலை வாய்ப்பினை ஊக்குவிப்பதற்கும், தொழில் வணிகத் துறையின் பல்வேறு கடனுதவி திட்டங்கள் மாவட்ட தொழில் மையம் வாயிலாக செயலாக்கம் பெற்று வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.
கடனுதவி திட்ட விபரங்கள் கீழ்க்கண்டவாறு பட்டியலிடப்படுகின்றன.

தகுதிக் குறிப்புகள் புதிய தொழில் முனைவோர் மற்றும் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் பிரதமமந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்
வயது வரம்பு 21-35 வருடங்கள் (பொது பிரிவு) 21-45 வருடங்கள் (பட்டியல் பிரிவு) 18-35 வருடங்கள் (பொது பிரிவு) 18-45 வருடங்கள் (பட்டியல் பிரிவு) 18 வருடங்கள் – உச்சவரம்பு இல்லை
கல்வித் தகுதி பட்டம், பட்டயம் மற்றும் தொழில்கல்வி தேர்ச்சி குறைந்தபட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி 10 இலட்சத்திற்கு மேற்பட்ட திட்ட மதிப்பீட்டிற்கு 8ம் வகுப்பு தேர்ச்சி
திட்ட மதிப்பீடு குறைந்தபட்சம் 10 இலட்சம் முதல் 500 இலட்சங்கள் வரை (உற்பத்தி மற்றும் சேவை தொழில் மட்டும்) உற்பத்தி தொழில்-அதிகபட்சம் 10 இலட்சம் வரை சேவை தொழில்-அதிகபட்சம் 3 இலட்சம் வரை வணிகம்அதிகபட்சம் 1 இலட்சம் வரை 10 இலட்சத்திற்கு குறைவான திட்ட மதிப்பீட்டிற்கு கல்வித் தகுதி இல்லை
மானிய அளவு 25 சதவிகித மூலதன மானியம் (அதிகபட்சம் 25 இலட்சம் வரை) மற்றும் 3 சதவிகித பின்முனை வட்டி மானியம 25 சதவிகித மானியம் அதிகபட்சம் 1.25 இலட்சம் வரை நகர்ப்புற பொது பிரிவு- 15 சதவிகித மானியம் நகர்ப்புற பட்டியல் பிரிவு- 25 சதவிகித மானியம் ஊரகப்பகுதி – பொது பிரிவு- 25 சதவிகித மானியம் ஊரகப்பகுதி – பட்டியல் பிரிவு- 35 சதவிகித மானியம்

மண்டல சோதனை ஆய்வுக்கூடம், மதுரை.7.

இவ்வாய்வுக்கூடம் மதுரை மாட்டுத்தாவணி சாலையில் உள்ள தொழிற்பேட்டையில் அமைந்துள்ளது. தென்பகுதியில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டுவரும் 1000 க்கும் மேற்பட்ட குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்தி பொருட்கள் ஆகியவற்றை 50 சதவிகித ஆய்வுக் கட்டண சலுகையுடன் பரிசோதித்து உரிய காலத்திற்குள் சோதனை சான்றிதழ்களை வழங்கி தரக்கட்டுப்பாட்டு பணியினை உறுதி செய்து வருகிறது. மேலும், அரசு பொதுப்பணி, மற்றும் தனியார் பொதுப்பணி ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் அனைத்து வகை கட்டுமானப் பொருட்களை ஆய்வு செய்து சான்றிதழ்களை வழங்கி வருகிறது. அன்றியும், வேதிப்பொருட்கள் நீர், கனிமப்பொருட்கள், ஆகியவற்றையும் பரிசோதித்து உரிய சான்றிதழ்களையும், வழங்கி வருகிறது. கல்லூரி மாணவர்களுக்கும், மற்றும் ஆராய்ச்சி கல்வியில் ஈடுபட்டுவரும் பேராசிரியர்களுக்கும், ஆய்வக நடைமுறை பயிற்சியினை வழங்கி வருகிறது.

மின் மற்றும் மின்னனு வளர்ச்சி மற்றும பயிற்சி மையம், மதுரை.7.

மதுரை, மாட்டுத்தாவணி சாலையில் சிட்கோ தொழிற்பேட்டை பின்புறம் இம்மையம் அமையப்பெற்றுள்ளது. மின் மற்றும் மின்னணு தொழிலில் ஈடுபடும் தொழில் முனைவோர்களுக்கு மேம்படுத்தப்பட்ட தொழில்கூட மனைகளை ஒதுக்கீடு செய்யும் பணியினை ஆற்றி வருகிறது. மின் மற்றும் மின்னனு பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களையும், மற்றும் விற்பனை நிறுவனங்களையும் திடீர் ஆய்வு செய்து தரச்சான்று முத்திரை இல்லாத பொருட்களை பறிமுதல் செய்து தரக்கட்டுப்பாட்டு பணிக்காக சென்னையில் உள்ள மத்திய ஆய்வகத்திற்கு அனுப்பும் பணியினை செய்து வருகிறது.

தொழிற்கூட்டுறவு பிரிவு

உதவி இயக்குநர் தலைமையில் மாவட்ட தொழில் மைய வளாகத்தினுள் தொழில் கூட்டுறவு பிரிவு பல்வேறு தொழில்கூட்டுறவு சங்கங்களை நிர்வகித்து வருகிறது. பத்துக்கும் மேற்பட்ட தொழிற்கூட்டுறவு சங்கங்கள் கூட்டுறவு நெறிமுறைகளின்படி, நல்லமுறையில் இயங்கி வருவதோடு பலதரப்பட்டு மக்களுக்கும், சுயவேலைவாய்ப்பினையும் தன்னம்பிக்கையையும் வழங்கி வருகிறது. மேற்கண்ட தொழிற்கூட்டுறவு சங்கங்களின் வாயிலாக ஏறத்தாழ இரண்டாயிரம் நபர்கள் பயனடைந்து வருகின்றனர்.

தகவல்அறியும் உரிமைச்சட்ட செயலாக்கம்

வழங்குவதற்கு வகையுள்ள அனைத்து தகவல்களும், தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005ன் படி, கோரிய நபர்களுக்கு குறிப்பிட்ட கால வரம்பிற்குள் வழங்கப்பட்டு வருகின்றன. பொது மக்கள் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி விபரங்கள் பின்வருமாறு:
பொது தகவல் அலுவலர் : திட்ட மேலாளர், உதவி இயக்குநர் மாவட்ட தொழில் மையம், அழகர்கோவில் சாலை, மதுரை.2.
மேல்முறையீட்டு தகவல் அலுவலர்: பொது மேலாளர், இணை இயக்குநர் மாவட்ட தொழில் மையம், அழகர்கோவில் சாலை, மதுரை.2.

பொதுத் தகவல்

அலுவலக முகவரி : பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம்,அழகர் கோவில் ரோடு, மதுரை.
தொலைபேசி எண் : 2537621
இமெயில் முகவரி : dicmdu2011[at]gmail[dot]com