திட்டங்கள்
தாட்கோ – திட்டம் ( SC/ ST )
தாட்கோ– 1. வெற்றி தொழில் முனைவோர்திட்டம் தகுதி விண்ணப்பதாரர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்இனத்தைச் சேர்ந்தவராக இருக்கவேண்டும். 18 முதல் 55 வயதிற்குள் இருக்க வேண்டும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ3.00 லட்சத்திற்குள் இருக்க வேண்டும் மானிய விபரம் இத்திட்டத்தின் மூலம் முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு மொத்த திட்டதொகையில்மூலதன மானியம் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. திட்ட தொகையில் 35% அல்லது அதிகபட்சமாக ரூ3.50இலட்சம் இதில் எது குறைவானதோ அது மானியமாக விடுவிக்கப்படும். 6% வட்டி மானியமும் வழங்கப்படுகிறது. ஆதிதிராவிடர்களுக்கான முன்னேற்றதிட்டம் (Pradhan Mantri Anusuchit Jaati Abhyuday Yojna – PM-AJAY) தகுதி விண்ணப்பதாரர் ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்தவராக…
முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம்
துறை: கிராமப்புற வளர்ச்சி முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டமானது தமிழக அரசால் 2011-12 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஊரக பகுதிகளில் வறுமையில் வாழுகின்ற அனைத்து வீடற்ற மக்களுக்கு வீடு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழான அனைத்து வீடுகளுக்கும் சூரிய மின்சக்தி உடன் கூடிய விளக்குகள் அமைத்து தரப்படுகிறது. இத்திட்டமானது அனைவருக்கும் வீடு வழங்கும் ஒரு முன்னோடி திட்டமாகும். இத்திட்டம் 100 சதவிகிதம் மாநில அரசு நிதியைக் கொண்டு செயல்படுத்தப்படுகிறது. ஊரக பகுதியில் வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள ஏழ்மையில் வாழும் மக்களுக்கு வீடு வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். நன்மைகள் அலகு தொகை – ரூ.2.10 இலட்சம்…
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம்
துறை: சுகாதாரம் திட்டம் : முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மூலமாக கட்டணமில்லாமல் வழங்குவதற்காகவும், அனைவருக்கும் சுகாதார வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் தமிழக அரசால் தொடங்கப்பட்டு, யுனைடெட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான காப்பிட்டுத் திட்டம் அனைத்து மக்களுக்கும் உலகத்தரத்தில் மருத்துவ சேவை வழங்கப்படும். இத்திட்டத்தினால் சுமார் 1.57 கோடி குடும்பங்கள் பயன்பெறுவர். இந்த திட்டத்தில் பச்சிளங்குழந்தைகளுக்கான சிகிச்சை முறை உட்பட 1027 சிகிச்சை முறைகளுக்கும், 154…