• சமூக ஊடக வலைதளங்கள்
  • தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
Close

மாவட்ட சுருக்கக் குறிப்புகள்

மதுரை மாவட்டம், மதுரை, மேலூர் மற்றும் உசிலம்பட்டி ஆகிய மூன்று வருவாய் கோட்டங்களையும், மதுரை வடக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம் , வாடிப்பட்டி , மேலூர் , மதுரை கிழக்கு, மதுரை தெற்கு, உசிலம்பட்டி, திருமங்கலம்,பேரையூர் மற்றும் கள்ளிக்குடி ஆகிய 11 வட்டங்களையும், 665 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கியுள்ளது. இம்மாவட்டம், மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம், மேலூர், கொட்டாம்பட்டி, வாடிப்பட்டி, அலங்காநல்லூர், உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சேடபட்டி, தே.கல்லுப்பட்டி, திருமங்கலம் மற்றும் கள்ளிக்குடி ஆகிய பதின்மூன்று வட்டாரங்களையும், 420 கிராம ஊராட்சிகளையும் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தில் ஒரு மதுரை மாநகராட்சியும் மேலூர், திருமங்கலம் மற்றும் உசிலம்பட்டி ஆகிய மூன்று நகராட்சிகளும், அ.வல்லாளபட்டி, அலங்காநல்லூர், எழுமலை, பாலமேடு, பரவை, பேரையூர், சோழவந்தான், தே.கல்லுப்பட்டி மற்றும் வாடிப்பட்டி ஆகிய ஒன்பது பேரூராட்சிகளும் உள்ளன.

மேலும் தகவல்களுக்கு இங்கே சொடுக்குக (PDF 205 KB)