Close

சமூகநலம்

அலுவலகம் செயல்படும் முகவரி

மாவட்ட சமூகநல அலுவலகம்,
ஆட்சியர் அலுவலக புதிய கட்டிடம்,
3 ம் தளம், மதுரை – 625020.
அலுவலக தொலைபேசி எண். 0452 – 2580259
மின்னஞ்சல்:-  dswomadurai[at]gmail[dot]com

சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை குழந்தைகள், பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் மற்றும் முதியோர் நலன்களுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.

கருவறையிலிருந்து கல்லறை வரை உள்ள அனைத்து தரப்பினரையும் காக்க வேண்டும் என்ற அடிப்படையில் சமூகநலத்துறை செயல்பட்டு வருகிறது. கருவில் வளரும் பெண்சிசுவினை அழிக்காமல் பாதுகாக்க விழிப்புணா்வு ஏற்படுத்துவதில் தொடங்கி பிறக்கும் பெண் குழந்தகைளின் உயிரைக் காக்கும் தொட்டில் குழந்தை திட்டம். ஆண் பெண் சமநிலையை உறுதிசெய்யும் விதமாக பெண் குழந்தையை காப்போம் கற்பிப்போம் என்ற திட்டம் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம். குழந்தை திருமண தடுப்புச் சட்டம் ஆகியன செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

பெண்களின் கல்வி மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் பெண்களுக்கான திருமண உதவித் திட்டங்கள், பாதுகா்பபற்ற மற்றும் வறுமையில் வாடும் பெண்களுக்கான சேவை இல்லங்கள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீ்ழ் வாழும் பெண்கள் பொருளாதார மேம்பாடு அடையும் வகையில் மகளிர் தொழிற்கூட்டுறவு சங்கங்களின் மூலம் விலையில்லா சீருடை தைத்து வழங்கும் திட்டம். தையல் இயந்திரங்கள் வழங்கும் திட்டம் ஆகியன செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இது தவிர பெண்களின் உரிமையை நிலைநாட்டும் வகையில் வரதட்சணை தடுப்பு சட்டம் மற்றும் குடும்ப வன்முறை தடுப்புச்சட்டம் ஆகியன இத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டுவருகிறது.

மூத்த குடிமக்கள் பாதுகாக்கும் விதமாக முதியோருக்கான இல்லங்கள். ஒருங்கிணைப்பு வளாகங்கள் மற்றும் மூத்தோர் நலன் காக்கும் சட்டம் ஆகியன சமூகநலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

குழந்தைகள் நலம்

சமூகநலத்துறையின் மூலம் குழந்தைகள் நலனுக்காக கீழ்க்கண்ட திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன.

  1. தொட்டில் குழந்தை திட்டம்
  2. முதலமைச்சரின் பெண்குழந்தைகள் பாதுகாப்புத்திட்டம்
  3. குழந்தை தத்தெடுத்தல் திட்டம்
  4. குழந்தை திருமண தடைச்சட்டம் 2006

தொட்டில் குழந்தை திட்டம்

சமூகம் மற்றும் பொருளாதார காரணங்களால் பெற்றோர்களால் கைவிடப்பட்ட அல்லது ஒப்படைக்கப்பட்ட குழந்தைகளையும். பெண்சிசுகொலை என்னும் கொடுமையில் இறப்பின் பிடியிலிருந்து காக்கும் பொருட்டு ஒவ்வொரு குழந்தைக்கும் உயிர் வாழ்வதற்கு உரிமை உள்ளது என்பதை உறுதி படுத்தும் நோக்கத்துடன் 2001-ம் ஆண்டு முதல் மதுரை மாவட்டத்தில் தொட்டில் குழந்தை திட்டம் செயல்பட்டுவருகின்றது
தொட்டில் குழந்தை வரவேற்பு மையங்கள் மூலம் பெறப்படும் குழந்தைகள் மாவட்ட சமூகநலத்துறையின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட தத்து நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படுகின்றது.

முதலமைச்சரின் பெண்குழந்தைகள் பாதுகாப்புத்திட்டம்

பெண் சிசுக்கொலையை அறவே ஒழித்தல், ஆண் குழந்தையை மட்டுமே விரும்பி ஏற்கும் நிலையினை மாற்றுதல், பெண்கல்வியினை ஊக்கப்படுத்துதல் போன்ற பெண் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு முதலமைச்சா் பெண்குழந்தை பாதுகாப்புத்திட்டம் செயல்பட்டுவருகிறது.

இத்திட்டத்தின்கீ்ழ் ஒன்று அல்லது இரண்டு பெண் குழந்தைகளுடன் 35 வயதிற்குள் பெற்றோரில் ஒருவா் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து இருந்தால் பெண்குழந்தைகளின் பெயரில் நிலையான வைப்புத்தொகையாக ஒரு பெண் குழந்தை என்றால் ரூ.50.000-ம். இரண்டு பெண்குழந்தை என்றால் ரூ.25.000- வீதம் இரண்டு பெண்குழந்தைகளுக்கும் தமி்ழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டு 18 வயது புா்த்தியடைந்து 10-ம் வகுப்பு தோ்ச்சி பெற்ற பெண்குழந்தைகளுக்கு முதிர்வு தொகை வழங்கப்படுகிறது.

விண்ணப்பங்கள் இ-சேவை மையம் மூலம் அனைத்து சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும்

குழந்தை தத்தெடுத்தல் திட்டம்

சமூகத்தில் அநாதையாக்கப்பட்ட ஆதரவற்ற புறக்கணிக்கப்பட்ட மற்றும் ஒப்படைக்கப்பட்ட குழந்தைகளை. பராமரிப்பு, பாதுகாப்பு, அன்பு. அரவணைப்பு. இன்பம் திறன்வளா்ப்பு சுதந்திரம் மற்றும் உரிமையும் அளிப்பதற்கான ஒரு இனிமையான குடும்ப சூழலை ஏற்படுத்துவதே தத்தெடுத்தல் ஆகும்.
மாநில மற்றும் மத்திய அரசால் அங்கீகரிக்கபட்ட நிறுவனங்கள் மூலம் தொட்டில் குழந்தை திட்டத்தின் மூலம் பெறப்பட்ட குழந்தைகள். குழந்தை இல்லாத பெற்றோர்களுக்கு தத்தெடுத்தல் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு தம்பதிகளுக்கு மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படுத்தப்படுகிறது.

குழந்தை திருமண தடைச்சட்டம் 2006

18 வயது நிறைவடையாத பெண்ணும் 21 வயது ஆணும் செய்யும் குழந்தை திருமணத்தை தடுக்கும் பொருட்டு இச்சட்டத்திற்கான 2006 குழந்தை திருமண தடைச்சட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இச்சட்டத்திற்கான மாநில விதிகளில் மாவட்ட சமூகநல அலுவலர் குழந்தை திருமண தடுப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மகளிர் நலம்

திருமண நிதியுதவித் திட்டம்

ஏழை பெற்றோரின் பெண்கள், விதவையரின் மகள், ஆதரவற்ற பெண்கள், கலப்பு திருமண செய்து கொள்ளும் தம்பதியர். மறுமணம் செய்து கொள்ளும் விதவையர் ஆகியோர்களுக்கு உதவிடும் வகையில் தமிழக அரசால் ஐந்து வகையான திருமண நிதியுதவித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

  1. மூவலூா் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமணநிதியுதவித்திட்டம்
  2. டாக்டா் தா்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம்
  3. ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண நிதியுதவித் திட்டம்
  4. அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமணநிதியுதவித் திட்டம்
  5. டாக்டா் முத்துலட்சுமிரெட்டி நினைவு கலப்பு திருமண நிதியுதவித் திட்டம்

நிதியுதவி விபரம்

10-ம் வகுப்பு – 12-ம் வகுப்பு – ரூ.25,000-ம் 8 கிராம் தங்கநாணயம்
பட்டப்படிப்பு – ரூ.50,000-ம் 8 கிராம் தங்கநாணயம்

அன்னை சத்தியவாணிமுத்து இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்

20 வயது முதல் 40 வயதிற்குட்பட்ட விதவை, கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், சமுதாயத்தில் நலிவடைந்த பெண்களுக்கு இலவச மின்மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது.

பணிபுரியும் மகளிர் இல்லம்

குடும்பத்தை விட்டு வெளியுரில் பணிபுரியும் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பெறும் மகளிருக்கு உணவுடன் பாதுகாப்பான தங்கும் வசதி வழங்கப்படுகிறது.

செயல்படும் இடம் – மாசாத்தனார் திருமண மண்டபம்,ஐம்புரோபுரம் மார்கெட் அருகில். கோரிப்பாளையம் மதுரை.

முதியோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன்

மாநில முதியோர் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கான இல்லங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வளாகம்

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோர்கள் மற்றும் ஆதரவற்ற நிலையிலுள்ள குழந்தைகளுக்கு பாதுகாப்பு. பராமரிப்பு மட்டுமின்றி பாசத்தையும் அன்பையும் பகிர்ந்து கொண்டு அறிவும் அனுபவ்ம உள்ள மூத்த தலைமுறையினா் வழிகாட்டிட யாருமின்றி தவிக்கும் இளைய தலைமுறையினருக்கு நல்ல வழிகாட்டிகளாகவும் அமையும் வகையில் இரு தலைமுறையினருக்கு சிறந்த சூழலை அமைத்துக் கொடுப்பதே இத்திட்டத்தின் சிறப்பம்சமான நோக்கமாகும். இத்திட்டமானது தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் மாநில அரசின் நிதியுதவில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

  1. ஏஞ்சல் ஹோம் டிரஸ்ட்.
    கிரீன் கவுஸ் சேவை இல்லம்.
    சோழவந்தான் மெயின் ரோடு
    தேனூா்.மதுரை 625 402
    தொலைபேசி – 94428 43937
    Maid ID – angelhometrustmdu@gmail[dot]com
  2. நியுமா அறக்கட்டளை,
    பாலமேடு,மதுரை – 18
    தொலைபேசி – 98946 86277
    Mail ID – pneumatrust@gmail[dot]com
  3. மாநில அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் முதியோர் இல்லம்கிளரிசீயன் மொ்சி ஹோம்
    அழகுசிறை. பொன்னமங்கலம் மதுரை.
    தொலைபேசி – 80986 72866
    Mail ID – claretbabyhome@yahoo[dot]com

மூன்றாம் பாலினத்தவா் நலன்

சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட மூன்றாம் பாலினத்தவா்களுக்கு சமூக மற்றும் பொருளாதார உதவிக்கான நலத்திட்டங்களை சமூகநலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

சமூக மற்றும் பொருளாதார உதவிக்கான நலத்திட்டங்கள் கீழ்க்கண்டவாறு வழங்கப்படுகிறது.

  1. அடையாள அட்டைகள்
  2. உணவுப் பொருள் வழங்கு அட்டைகள்
  3. வாக்காளா் அடையாள அட்டைகள்
  4. வீட்டு மனைப்பட்டாக்கள்
  5. மருத்துவ வசதிகள்
  6. இலவச வீட்டு வசதி
  7. கல்வி உதவித்தொகை
  8. திறன் வளா்ப்பு பயிற்சிகள்
  9. சுய உதவிக்குழுக்களுக்கு ஆதரவளித்தல்
  10. பொருளாதார செயல்பாட்டிற்கு ஆதரவளித்தல்
  11. குறுகியகால தங்கும் இல்லங்கள்

சமூகநலத்துறை மூலம் நடைமுறைப்படுத்தப்படும் சட்டங்கள்

  1. குழந்தை திருமண தடைச்சட்டம் 2006
  2. பெண்களை பாதுகாக்கும் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் 2005
  3. பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு. தடை மற்றும் தீ்ர்வு) சட்டம் 2013
  4. வரதட்சணை தடுப்புச்சட்டம் 1961
  5. பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமாரிப்பு மற்றும நல்வாழ்வு சட்டம் 2007 மற்றும் விதிகள் 2009

பொது தகவல் அலுவலா் :

கண்காணிப்பாளா்,
மாவட்ட சமூகநல அலுவலகம்,
ஆட்சியர் அலுவலக புதிய கட்டிடம்,
3 ம் தளம், மதுரை – 625020.
அலுவலக தொலைபேசி எண். 0452 – 2580259
மின்னஞ்சல்:-  dswomadurai[at]gmail[dot]com

மேல்முறையீடு அலுவலா் – மாவட்ட சமூகநல அலுவலர்,

மாவட்ட சமூகநல அலுவலகம்,
ஆட்சியர் அலுவலக புதிய கட்டிடம்,
3 ம் தளம், மதுரை – 625020.
அலுவலக தொலைபேசி எண். 0452 – 2580259
மின்னஞ்சல் . dswomadurai[at]gmail[dot]com

மேலும் விவரங்களுக்கு www.tnsocialwelfare.org என்ற இணையதள முகவரியை அணுகலாம்.

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள்

திட்டத்தின் நோக்கங்கள்

  1. நோக்கங்கள் மனம், உடல், மொழி மற்றும் சமூக வளர்ச்சி ஆகியவை முழுமையான வளர்ச்சியாக இருக்க முறையான அடித்தளம் அமைத்தல்.
  2. பிறந்தது முதல் 6 வயது வரையான குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலை மற்றும் சுகாதார நிலையை மேம்படுத்துதல்.
  3. ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரக் கல்வியின் மூலமாக, குழந்தைகளின் ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம் தொடர்பான தேவைகளை அறிந்து செயல்படுத்த தக்க வகையில் தாய்மார்களின் திறனை மேம்படுத்துதல்.

திட்டப் பயனாளிகள்

  1. 0-6 வயது குழந்தைகள்
  2. கர்ப்பிணிகள்
  3. பாலூட்டும் தாய்மார்கள்
  4. வளரிளம் பெண்கள்

துடிப்பு மிக்க குழந்தை நல மையமாக மாற்ற ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள்

  1. ஆரம்பகால குழந்தை பராமரிப்பு மற்றும் கல்வி முறைசாரா பள்ளி- முன்பருவக் கல்வி.
  2. இணை உணவு- மதிய உணவு
    வீட்டிற்கு எடுத்துச் சென்று பயன்படுத்தப்படும் இணை உணவு
    சூடான சமைத்த உணவு
  3. பச்சிளம் குழந்தை மற்றும் இளம் குழந்தைகளுக்கான பராமரிப்பு உணவு வழங்குதல் முறை மற்றும் ஆலோசனை.
  4. கர்ப்பகால பராமரிப்பு மற்றும் ஆலோசனை.
  5. பராமரிப்பு, ஊட்டச்சத்து, சுத்தம் மற்றும் சுகாதாரம் குறித்த கல்வி.
  6. சமுதாயத்தில் எடை குறைந்த குழந்தைகளை பராமரித்தல்.

சுகாதாரத் துறையுடன் இணைந்து செயல்படும் பணிகள்

  1. தடுப்புசி போடுதல் மற்றும் நுண்ணூட்டச் சத்து வழங்குதல்.
  2. மருத்துவ பரிசோதனை.
  3. மருத்துவ பரிந்துரை.
  4. தகவல், கல்வி தொடர்பு முகாம் (ம) விழிப்புணர்வுக்கான செயல்கள் முதன்மைச் செயல்பாடுகள்.

தேசிய ஊட்டச்சத்து குழுமம்

தமிழ்நாட்டில் அரியலூர், நீலகிரி, விழுப்புரம், திண்டுக்கல் மற்றும் சென்னை ஆகிய 5 மாவட்டங்களில் 2017-2018ம் ஆண்டில் தேசிய ஊட்டச்சத்து குழுமம் செயல்படுத்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 2018-2019ஆம் ஆண்டுகளில் மீதமுள்ள மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
அடுத்த மூன்று ஆண்டுகளில் 0-6 வயது குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துவதற்காக கீழ்க்கண்டவாறு இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நோக்கங்கள் மற்றும் இலக்கு

  1. 0-6 வயது குழந்தைகளிடையே வயதிற்கேற்ற உயர குறைவினை குறைத்தல் மற்றும் தடுத்தல் – ஒவ்வொரு ஆண்டும் 2 சதவிகிதம் வீதம் 6 சதவிகிதம் குறைத்தல்
  2. 0-6 வயது குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு (எடை குறைவு) குறைத்தல் மற்றும் தடுத்தல் – ஒவ்வொரு ஆண்டும் 2 சதவிகிதம் வீதம் 6 சதவீதம் குறைத்தல்
  3. 6-59 மாதங்கள் உள்ள இளங் குழந்தைகளிடையே இரத்தசோகை தாக்கத்தினை குறைத்தல் – ஒவ்வொரு ஆண்டும் 3 சதவிகிதம் வீதம் 9 சதவீதம் குறைத்தல்
  4. 15-49 வயதில் உள்ள வளரிளம் பெண்கள் மற்றும் தாய்மார்களிடையே இரத்தசோகை தாக்கத்தினை குறைத்தல் – ஒவ்வொரு ஆண்டும் 3 சதவிகிதம் வீதம் 9 சதவீதம் குறைத்தல்
  5. குறைந்த பிறப்பு எடை குறைத்தல் – ஒவ்வொரு ஆண்டும் 2 சதவிகிதம் வீதம் 6 சதவீதம் குறைத்தல்

அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டுதல் மற்றும் குடிநீர் இணைப்பு போன்ற வசதிகளை ஏற்படுத்தி தருதல்

அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டுதல், குழந்தை நேய கழிப்பறை கட்டுதல் மற்றம் குடிநீர் வசதி செய்தல் ஆகியவற்றிற்கு தமிழக அரசால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்துடன் ஒருங்கிணைந்து 2016-2017 மற்றும் 2017-2018ஆம் ஆண்டுகளில், ஆண்டிற்கு மாநில அளவில் 1000 மையங்கள் வீதம் 2000 அங்கன்வாடி மையங்கள் கட்ட ஆணையிடப்பட்டுள்ளது.

அலுவலகத்தின் பெயர் – மாவட்ட திட்ட அலுவலகம்,
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம்,
ஆட்சியர் அலுவலக புதிய கட்டிடம்,
3 ம் தளம், மதுரை – 625020.

அலுவலக தொலைபேசி எண் – 0452-2533217
அலுவலக மின்னஞ்சல் முகவரி – d623mdu[at]gmail[dot]com

பொது தகவல் அலுவலா் – கண்காணிப்பாளா்,
மாவட்ட திட்ட அலுவலகம்,
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம்,
ஆட்சியர் அலுவலக புதிய கட்டிடம்,
3 ம் தளம், மதுரை – 625020.

மேல்முறையீடு அலுவலா் – மாவட்ட திட்ட அலுவலா்.
மாவட்ட திட்ட அலுவலகம்,
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம்,
ஆட்சியர் அலுவலக புதிய கட்டிடம்,
3 ம் தளம், மதுரை – 625020.

மேலும் விவரங்களுக்கு http://icds.tn.nic.in என்ற இணையதள முகவரியை அணுகலாம்.