Close

குறைகளை எப்படி தெரிவிக்கலாம்

இணைய வழி மனுக்கள் – பொது மக்களுக்கு மட்டும்

இந்த இணையவழித் தொடர்பைப் பயன்படுத்தி, பொதுமக்கள் தங்களுடைய குறை சார்ந்த மனுக்களை இந்த மனு பரிசீலிக்கும் முனையத்தில் சமர்ப்பிக்கலாம். ஆரம்பநிலை பரிசீலனைக்குப் பிறகு, சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு மனுவும் சமர்ப்பிக்கப்படும் போதும் மற்றும் தீர்வின் போதும் மனுதாரர் ஒரு குறுந்தகவலைப் பெறுவார். இருப்பினும், இவ்வசதியைப் பயன்படுத்த, ஒரு கைபேசி எண் அவசியம்.

மனுவின் நிலையை அறியவும்

இந்த இணையவழித் தொடர்பைப் பயன்படுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்புகள், பொது சேவை மையங்கள், மற்றும் இணையவழி மூலமாக சமர்ப்பிக்கப்பட்ட மனுக்களின் நிலையை ஒரு மனுதாரர் அறிந்து கொள்ளலாம். இவ்வசதியைப் பயன்படுத்த, மனு சமர்ப்பிக்கப்பட்ட போது கொடுக்கப்பட்ட மனு எண்ணை மனுதாரர் அறிந்திருக்கவேண்டும்.

பார்க்க: http://gdp.tn.gov.in

மக்கள் குறை தீர்க்கும் பிரிவு-மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை
இடம், இருப்பிடம் : மாவட்ட ஆட்சியர் அலுவலகம் | மாநகரம் : மதுரை | அஞ்சல் குறியீட்டு : 625020