Close

திருப்பரங்குன்றம் முருகன் திருக்கோவில்

மதுரை இரயில்நிலையத்திலிருந்து 8 கிலோமீட்டா் தொலைவில் இத்தலம் உள்ளது. இது முருகன் (அ) சுப்ரமணியரின் ஆறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாகும். உறுதி வாய்ந்த கற்பாறையில் (மலையில்) இறைவனின் திருமேனி செதுக்கப்பட்டுள்ளது. இது ஒரு குடைவரைக் கோயிலாகும். இங்குள்ள குடைவரைக் கோயில்கள் 8 ஆம் நூற்றாண்டில் பாண்டியர்களின் காலத்தவை என கணக்கிடப்படுகின்றன. இந்த ஆலயத்தின் சிறப்பு என்னவென்றால், சுப்ரமணியரின் திருமணம் இந்திரன் மகளான தேவயானையுடன் இங்கே நிகழ்ந்தது. பழம்பெருமை வாய்ந்த இந்த கோயில், பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. சுவர்கள் மற்றும் தூண்களில் கண்கவர் சிற்பங்கள் உள்ளன.

புகைப்பட தொகுப்பு

  • கோபுர தோற்றம்
  • சுப்பிரமணியர் திருக்கோவில்
  • கோவில் தோற்றம்

செல்வது எப்படி:

வான் வழி

மதுரை விமான நிலையம் நகரிலிருந்து 12 கி.மீ. (7.5மைல்கள்) தொலைவில் அவனியாபுரத்தில் உள்ளது.

தொடர்வண்டி வழி

மதுரை இரயில்வே சந்திப்பு, மாவட்டத்தின் முக்கிய இரயில் நிலையமாக விளங்குகிறது. பயணிகள் இரயில்கள் தவிர, திருப்பரங்குன்றம் இரயில்நிலையத்தில் பல எக்ஸ்பிரஸ் இரயில்கள் நிறுத்தப்படுவதில்லை.

சாலை வழி

மதுரை நகரத்திலிருந்து மாநில போக்குவரத்துக் கழகத்திலிருந்து பேருந்துகள் இயங்குகின்றன. மதுரை நகரத்திலிருந்து சொந்த வாகனங்களில் செல்லலாம்.