Close

தெப்பக்குளம்

வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம்

மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து 4 கி.மீ. தொலைவில் தெப்பக்குளம் அமைந்துள்ளது. தெப்பக் குளக்கரையில் புகழ்பெற்ற மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. மன்னர் திருமலை நாயக்கர் மகால் கட்டுவதற்காக மண் எடுக்கப்பட்ட இடத்தை அப்படியே தெப்பக்குளமாக்கிவிட்டார். மிகப்பெரிய தெப்பக் குளத்தின் மைய மண்டபத்தில் ஒரு விநாயகர் கோயிலும் உள்ளது.

புகைப்பட தொகுப்பு

  • வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம்
  • மதுரை தெப்ப திருவிழா
  • மாரியம்மன் தெப்பக்குளம்

செல்வது எப்படி:

வான் வழி

மதுரை விமான நிலையம் நகரிலிருந்து 12 கி.மீ. (7.5மைல்கள்) தொலைவில் அவனியாபுரத்தில் உள்ளது. இங்கிருந்து இந்தியாவில் உள்ள சில நகரங்களுக்கு உள்நாட்டு விமான போக்குவரத்து நடைபெற்று வருகிறது. கொழும்பு, துபாய், சிங்கப்பூா் போன்ற அயல்நாடுகளுக்கும் விமான போக்குவரத்து நடைபெற்றுவருகிறது.

தொடர்வண்டி வழி

மதுரை இரயில்வே சந்திப்பு, மாவட்டத்தின் முக்கிய இரயில் நிலையமாக விளங்குகிறது. இந்தியாவில் உள்ள பல முக்கிய நகரங்களுக்கும், புதுதில்லி, மும்பை, கொல்கொத்தா மற்றும் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களுக்கும் இங்கிருந்து நேரடி தொடா்வண்டிகள் இயக்கப்படுகின்றன.

சாலை வழி

தேசிய நெடுஞ்சாலைகள் எண். 7, 45பி, 208 மற்றும் 49 ஆகியவை மதுரை மாவட்டம் வழியாக செல்கின்றன. மாநில நெடுஞ்சாலைகள் எண்.33, 72, 73 மற்றும் 73ஏ போன்றவை மதுரை மாவட்டத்தின் பல பகுதிகளை இணைக்கின்றன. பல நகரங்களிலிருந்து போக்குவரத்துக் கழக பேருந்துகள் மதுரைக்கு இயக்கப்படுகிறது.