அழகர் கோவில்
அழகர் கோவில்
மதுரையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் இருக்கிறது அழகர் கோயில். இந்த சோலை மலையில் அமைந்திருக்கும் கோவிலில் தான் ஆண்டுக்கு ஆண்டு சித்திரை திருவிழாவின்போது வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகர் கோயில் கொண்டிருக்கிறார். தமிழர்களின் சிற்பக் கலைக்கு சான்றாக நிற்கும் கோயில்களில் இதுவும் ஒன்று, சில அழகிய சிற்பங்களைக் கொண்டிருக்கிறது. இந்த கோயில் அமைதியான பரந்த சூழலில் ஒரு மலை மீது அமைந்துள்ளது. இந்த கோவில் அழகர் கோவில் என்றும், இந்த மலை சோலைமலை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கோவில் சில அழகிய சிற்பங்களைக் கொண்டிருக்கிறது. தழிழ்க் கடவுள் முருகனின் ஆறுபடைவீடுகளில் ஒன்றான பழமுதிர் சோலை இந்த மலையில்தான் உள்ளது.
புகைப்பட தொகுப்பு
செல்வது எப்படி:
வான் வழி
மதுரை விமான நிலையம் நகரிலிருந்து 12 கி.மீ. (7.5மைல்கள்) தொலைவில் அவனியாபுரத்தில் உள்ளது.
தொடர்வண்டி வழி
மதுரை இரயில்வே சந்திப்பு, மாவட்டத்தின் முக்கிய இரயில் நிலையமாக விளங்குகிறது.
சாலை வழி
மதுரை நகரத்திலிருந்து மாநில போக்குவரத்துக் கழகத்திலிருந்து பேருந்துகள் இயங்குகின்றன. மதுரை நகரத்திலிருந்து சொந்த வாகனங்களில் செல்லலாம்.