Close

மின்னாளுமை

முன்னுரை:

மின்னாளுமை மாவட்ட திட்டம் என்பது தேசிய மின்னாளுமை திட்டத்தின் கீழ் மாநில கொள்கை முனைப்பு திட்டங்களின் (State Mission Mode Project) ஒரு பகுதியாக விளங்குகிறது. மிக அதிக அளவில் சேவை வழங்கப்படும் அரசு சேவைகளில், சேவைகளின் தரத்தை உயர்த்தி, இணையம் மூலமாக வழங்குவதற்காக, தகவல் தொழில்நுட்பம் மற்றும் அரசு செயல்பாடுகள் மறுசீரமைப்பு தொழில்நுட்பங்களை இந்த திட்டத்தில் பயன்படுத்துகிறது. தகவல் தொழில்நுட்பத்துறை அரசாணை படி அனைத்து மாவட்டங்களிலும் மின்னாளுமை மாவட்ட திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும் அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட மின்னாளுமை சங்கம் ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டு, அதன் படி மாவட்ட ஆட்சித்தலைவரை தலைவராகக்கொண்ட மாவட்ட மின்னாளுமை சங்கம் 30.12.2012 அன்று ஏற்படுத்தப்பட்டது.

மின்னாளுமை மாவட்ட சேவைகள்:

மின்னாளுமை மாவட்ட வருவாய்த்துறை சேவைகள் மதுரை மாவட்ட வருவாய் துறையின் கீழ் 20 சேவைகள் வழங்கப்படுகின்றன.

மின்னாளுமை வருவாய்த்துறை சேவைகள்
வ.எண் சேவையின் பெயர் சேவை கட்டணம்
1 சாதி சான்றிதழ் 60
2 பிறப்பிட சான்றிதழ் 60
3 வருமான சான்றிதழ் 60
4 முதல் பட்டதாரி சான்றிதழ் 60
5 கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் சான்றிதழ் 60
6 விவசாய வருமான சான்றிதழ் 60
7 இயற்கை இடர்பாடுகளினால் இழந்த பள்ளி / கல்லூரி சான்றிதழ்களின் நகல் பெற சான்றிதழ் 60
8 குடிபெயர்வு சான்றிதழ் 60
9 கலப்பு திருமண சான்றிதழ் 60
10 வாரிசு சான்றிதழ் 60
11 அடகு வணிகர் உரிமம் 60
12 கடன் கொடுப்போர் உரிமம் 60
13 ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ் 60
14 இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு சான்றிதழ் 60
15 வசிப்பிட சான்றிதழ் 60
16 சிறு குறு விவசாயி சான்றிதழ் 60
17 சொத்து மதிப்பு சான்றிதழ் 60
18 வேலையில்லாதவர் என்பதற்கான சான்றிதழ் 60
19 திருமணம் ஆகாதவர் என்பதற்கான சான்றிதழ் 60
20 விதவை சான்றிதழ் 60

மின்னாளுமை மாவட்ட சமூக நலத்துறை சேவைகள் 13 வட்டாரங்களிலும் செயல்படுத்தப்படுகிறது. இதில் பின்வரும் 7 சேவைகள் வழங்கப்படுகிறது.

மின்னாளுமை சமூக நலத்துறை சேவைகள்
வ.எண் சேவையின் பெயர் சேவை கட்டணம்
1 அன்னை தெரசா அம்மையார் நினைவு அனாதை பெண் திருமண உதவி திட்டம் 120
2 தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவி திட்டம் 120
3 டாக்டர் முத்துலெட்சுமிரெட்டி நினைவு கலப்பு திருமண உதவி திட்டம் 120
4 ஈவேரா மணியம்மை நினைவு விதவை மகள் திருமண உதவி திட்டம் 120
5 மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவி திட்டம் 120
6 பெண்குழந்தை பாதுகாப்பு திட்டம் -I 120
7 பெண்குழந்தை பாதுகாப்பு திட்டம் – II 120

இணைய வழி பட்டா மாறுதல் அனைத்து வட்டங்களிலும் செயல்படுத்தப்படுகிறது.

  1. தமிழ்நிலம் – உட்பிரிவுகளுடன் கூடியது (ஊரகம்)
  2. தமிழ்நிலம் – உட்பிரிவுகள் இல்லாதது (ஊரகம்)
  3. தமிழ்நிலம் – கூட்டு பட்டா மாறுதல் (ஊரகம்)
  4. தமிழ்நிலம் – உட்பிரிவுகளுடன் கூடியது (நகர்புறம்)
  5. தமிழ்நிலம் – உட்பிரிவுகள் இல்லாதது (நகர்புறம்)
இணைய வழி பட்டா மாறுதல் சேவைகள்
வ.எண் சேவையின் பெயர் சேவை கட்டணம்
1 முழுப்புலம் பட்டா மாறுதல் 60
2 உட்பிரிவு பட்டா மாறுதல் 60
3 அ-பதிவேடு விவரங்களை பதிவிறக்கம் செய்தல் 25
4 நில உரிமை(பட்டா/சிட்டா) விவரங்களை பதிவிறக்கம் செய்தல் 25
இதர துறை சேவைகள்
வ.எண் துறையின் பெயர் சேவையின் பெயர் சேவை கட்டணம்
1 தீயணைப்பு துறை தடையின்மை சான்றிதழ் – பல மாடி குடியிருப்பு திட்ட அனுமதி 120
2 தீயணைப்பு துறை பல மாடி குடியிருப்பு-தீ அனுமதி- பதிவு மற்றும் புதுப்பித்தல் 120
3 தீயணைப்பு துறை தடையின்மை சான்றிதழ் –குடியிருப்பு திட்ட அனுமதி 120
4 தீயணைப்பு துறை தீ அனுமதி- பதிவு மற்றும் புதுப்பித்தல் 120
5 காவல் துறை CSR நிலை 15
6 காவல் துறை FIR நிலை 15
7 காவல் துறை ஆன்லைன் புகார் பதிவு செய்தல் 25
8 காவல் துறை நிலையைப் பார்க்க 15
9 காவல் துறை வாகன நிலை தேடல் 15
10 பொது வினியோகத்திட்டம் புதிய குடும்ப அட்டை விண்ணப்பிக்க 60
11 பொது வினியோகத்திட்டம் குடும்ப அட்டை திருத்தம் 60
12 TANGEDCO மின் கட்டணம் செலுத்துதல் 15 – 60

UMANG:-

Unified Mobile Application for New Age Governance தேசிய அளவில் உருவாக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மின்னாளுமை மூலம் மத்திய அரசுத் துறைகள் முதல் உள்ளாட்சித் துறைகள் வரை வழங்கப்பட்டு வரும் சேவைகள் ஒரே தரவுதளத்தின் கீழ் இச்செயலி வழங்கும். தமிழ்நாடு மின்னாளுமை முகமையின் மூலம் மின்மாவட்டத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் சேவைகள் முதற்கட்டமாக வருவாய்துறை கீழ் வரும் சேவைகள் சாதி சான்றிதழ், பிறப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ் ஆகியவை செயலியில் இணைக்கபட்டுள்ளது.
https://web.umang.gov.in/web/#/ என்ற URL மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இ சேவை திறந்த நிலை சேவைதளம்:-

www.tnesevai.tn.gov.in/citizen என்ற திறந்த நிலை சேவைதளம் மூலம் பொது மக்கள் தாங்களாகவே விண்ணப்பித்து வருவாய்த்துறை கீழ் வரும் 20 சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்.

முக்கிய இணைப்புகள்:

பொது மக்களுக்கான பயனுள்ள இணைப்புகள்:
  1. https://edistricts.tn.gov.in/revenue/status.html – வருவாய்த்துறை சான்றிதழ்களுக்கான விண்ணப்ப நிலை
  2. https://edistricts.tn.gov.in/socialwelfare/status.html – சமூக நலத் திட்டங்களுக்கான விண்ணப்ப நிலை
  3. https://edistricts.tn.gov.in/revenue/verifyCertificate.html – சான்றிதழ் மெய்த்தன்மை சரிபார்ப்பு
  4. http://edistrict.tn.gov.in:8080/socialwelfare_girlchild/status.html – குழந்தை பாதுகாப்புத் திட்ட விண்ணப்ப நிலை