செல்வது எப்படி
மதுரை உங்களை வரவேற்கிறது
சாலை வழி :
தேசிய நெடுஞ்சாலைகள் எண். 7, 45பி, 208 மற்றும் 49 ஆகியவை மதுரை மாவட்டம் வழியாக செல்கின்றன. மாநில நெடுஞ்சாலைகள் எண்.33, 72, 73 மற்றும் 73ஏ போன்றவை மதுரை மாவட்டத்தின் பல பகுதிகளை இணைக்கின்றன.
இரயில் வழி:
மதுரை இரயில்வே சந்திப்பு, மாவட்டத்தின் மிக முக்கியமான இரயில் நிலையமாக செயல்பட்டுவருகிறது. மதுரை, தென்னக இரயில்வே கோட்டத்தின் தலைமையிடமாக விளங்குவதால், இந்தியாவில் உள்ள மிக முக்கியமான நகரங்களுக்கும், புதுதில்லி, மும்பை, கொல்கொத்தா மற்றும் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களுக்கும், இங்கிருந்து நேரடி தொடா்வண்டிகள் இயக்கப்படுகின்றன.
வான் வழி :
மதுரை விமான நிலையம் 1957ம் ஆண்டு அவனியாபுரத்தில் துவங்கப்பட்டது. இது மதுரை நகரிலிருந்து 12 கி.மீ. (7.5மைல்கள்) தொலைவில் உள்ளது. இங்கிருந்து இந்தியாவில் உள்ள சில நகரங்களுக்கு உள்நாட்டு விமான போக்குவரத்து நடைபெற்று வருகிறது. மதுரை விமான நிலையம் 2012ம் ஆண்டு சுங்க விமான நிலையமாக அறிவிக்கப்பட்டு, கொழும்பு, துபாய், சிங்கப்பூா் போன்ற அயல்நாடுகளுக்கும் விமான போக்குவரத்து நடைபெற்றுவருகிறது. இந்த விமான நிலையத்திலிருந்து ஏா் இந்தியா, ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ், ஜெட் ஏா்வேஸ், ஸ்பைஸ்ஜெட், இண்டிகோ மற்றும் ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் ஆகிய நிறுவனங்களின் விமானங்கள் செயல்பட்டுவருகின்றன.