வேளாண்மைத் துறை
நோக்கம் :
வேளாண்மைத் துறையின் முக்கிய நோக்கம் விவசாயிகளின் உற்பத்தியை இருமடங்காக ஆக்குவதும் வருமானத்தை மும்மடங்காக உயர்த்துவது ஆகும். இரண்டாம் பசுமை புரட்சியை ஏற்படுத்திட வேளாண்மைத் துறை பல்வேறு யுத்திகளையும், திட்டங்களையும் வகுத்து நீடித்த நிலையான வேளாண் வளர்ச்சிக்கு வித்திட்டு வருகிறது. மதுரை மாவட்டம் அடிப்படையில் வேளாண்மை சார்ந்த மாவட்டமாகும். மாவட்டத்தின் இயல்பான சராசரி மழையளவு 874.5 மி.மீ. நெல், சிறுதானியம், பயறுவகை, பருத்தி பயிர்கள் பிரதானமாக சாகுபடி செய்யப்படுகிறது. பெரியாறு – வைகை பிரதான பாசன ஆதாரமாக உள்ளது.
அடிப்படை விபரம்
- விவசாயிகள் விபரம் ( 2011 – கணக்கெடுப்பின்படி )
- வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள் : 13
- வேளாண் விரிவாக்க மையங்கள்
(விவசாயிகளுக்கு தேவையான இடுபொருள் தொழில்நுட்ப செய்தி வழங்குதல்)
முதன்மை விரிவாக்க மையம் : 13
துணை விரிவாக்க மையம் : 18 - விதை சுத்திகரிப்பு நிலையம் : 2
- மாநில அரசு விதைப்பணை : 1
(விநாயகபுரம், தெற்குதெரு, மேலூர்) - மண் பரிசோதனை நிலையம் : 1
(வடக்கு சித்திரை வீதி, மதுரை-1 தொலைபேசி- 0452-2627022) - நடமாடும் மண் பரிசோதனை நிலையம் :1
(வடக்கு சித்திரை வீதி, மதுரை-1 தொலைபேசி- 0452-2627022) - உரக்கட்டுப்பாட்டு ஆய்வகம் : 1
( மேலக்கண்மாய் தெரு
தல்லாகுளம், மதுரை-2)
இமெயில்:flcmdu@gmail[dot]com - பூச்சிக்கொல்லி மருந்து ஆய்வகம் : 1
( மேலக்கண்மாய் தெரு
தல்லாகுளம், மதுரை-2)
இமெயில்: mduraiptl@gmail[dot]com - திரவ உயிர் உர உபற்பத்தி மையம் : 1
(120,சிட்கோ, திருமங்கலம் இமெயில்:liquidbiomdu@gmail[dot]com) - உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம் : 1
(விநாயகபுரம், தெற்குதெரு, மேலூர் ) - ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு காரணி ஆய்வகம் : 1
(விநாயகபுரம், தெற்குதெரு, மேலூர் ) - கரும்பு ஒட்டுண்ணி மையம் : 1
(விநாயகபுரம், தெற்குதெரு, மேலூர் ) - மாநில நீர் மேலாண்மை பயிற்சி நிலையம். : 1
(விநாயகபுரம், தெற்குதெரு, மேலூர் )
தொலைபேசி: 0452-2911058 - வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம். : 1
(ஒத்தக்கடை ) 0452-2422956 - வேளாண் அறிவியல் நிலையம் : 1
(ஒத்தக்கடை ) 0452-2422956 - உரக்கடைகளின் எண்ணிக்கை : 413
- தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் : 182
- பயிர் சாகுபடி செறிவு : 1.16
- நீர்ப்பாசன செறிவு : 1.18
சிறு விவசாயி : 58,116
குறு விவசாயி : 2,05,771
வேளாண் தொழிலாளா் : 4,01,867
சோழவந்தான்
விநாயகபுரம்
உற்பத்தியை பெருக்கிட- விரிவாக்க பணிகள் :
வேளாண் விரிவாக்க பணியாளர்களின் முக்கிய பணி பயிர்களின் மகசூல் இடைவெளியை குறைத்து உற்பத்தி திறனை பெருக்குவதாகும். கீழ்க்கண்ட விரிவாக்க பணிகள் வேளாண்மை உதவி இயக்குநர், வேளாண்மை அலுவலர், துணை வேளாண்மை அலுவலர் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்களால் மேற்கொள்ளப்படுகிறது.
நிரந்தர பயணத் திட்டத்தின்படி உதவி வேளாண்மை அலுவலர் அரைத் திங்களுக்கு ஒருமுறை கிராமங்களுக்கு பயணம் மேற்கொள்ளுதல்
கிராம முனைப்பு இயக்கம் – மாலை கூட்டங்கள்
புதிய தொழில்நுட்பங்களை தெரிவித்திட – செயல் விளக்கம், பயிற்சி, பட்டறிவு பயணம் மேற்கொள்ளுதல்
பூச்சி நோய் கண்காணிப்பு
இடுபொருள் இருப்பு, உயிர்து உரம், நுண்ணூட்ட உரம் இருப்பு, கடன் மற்றும் பண்ணைக்கருவி, விளைபொருள் சந்தை நிலவரம், புதிய தொழில்நுட்ப உத்திகளை விவசாயிகளுக்கு தெரிவித்தல்
திருந்திய நெல்சாகுபடி, திருந்திய பயறு சாகுபடி – முழு கிராம திட்ட அணுகுமுறை
மண்வள அட்டை விநியோகம்
பயிர் அறுவடை பரிசோதனை
பயிர் காப்பீடுட்டு திட்டம் – விழிப்புணர்வு முகாம்
பயிர் விளைச்சல் போட்டியில் பங்கேற்க செய்தல்
வேளாண்மைத் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள்
மண்வள இயக்கம்
இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை இலவசமாக மண்வள அட்டை வழங்கல். சமர்ச்சீர் உரமிடுதல் மற்றும் மண் பரிசோதனையிதுன்படி நிலச்சீர்திருத்தம் மண் சார்ந்த பிரச்சினைகளை கண்டறிதல் மற்றும் வட்டார அளவிலான உரப்பரிந்துரை செய்தல்.
(மேலும் விபரங்களுக்கு: https://soilhealth.dac.gov.in )
தமிழ்நாடு விதை மேம்பாட்டு முகமை.
பயிர் மகசூல் உற்பத்தியைப் பெருக்கிட தரமான சான்று விதை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்குதல்.
பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம்
திட்டத்தின் நோக்கம் :
இயற்கை இடர்பாடுகளால் இழப்பு ஏற்படும் விவசாயிகளுக்கு உதவிடுதல் விவசாயிகளுக்கு நிலையான வருமானம் கிடைக்கச் செய்து அவர்களை விவசாயத்தில் நிலை பெற செய்தல். நவீன வேளாண்மை தொழில்நுட்பங்களை கடைபிடிக்க விவசாயிகளை ஊக்குவித்தல். விவசாய பெருமக்களை உற்பத்தி இழப்பு ஏற்படும் அபாயத்திலிருந்து பாதுகாப்பதுடன் உணவு பாதுகாப்பிற்காக கடன் உதவி செய்து வேளாண் வளர்ச்சியை மேம்படுத்துதல்.
காப்பீடு விபரம் :
விதைப்பு பொய்த்தல் / நடவு செய்ய இயலாத சூழல் பயிர் காலத்தில் ஏற்படும் இடர்கள் வௌ்ளம், வறட்சி, வறண்ட வானிலை, வௌ்ள நீர் தேக்கமுறுதல், பூச்சி / நோய் தாக்குதல் பயிர் அறுவடை பின் ஏற்படும் இழப்புக்கள். சிறு பகுதிகளில் மட்டும் ஏற்படும் இடர்பாடுகள் – புயல்காற்று,நிலச்சரிவு, வௌ்ள நீர், தேக்கம்.
(மேலும் விபரங்களுக்கு http://agri-insurance.gov.in )
கூட்டுப்பண்ணையம்
சிறு,குறு விவசாயிகளை உழவர் உற்பத்தியாளர் குழுவில் பங்கேற்க செய்தல் அறிவுசார் விவரங்களை பகிர்ந்து கொள்ளுதல் செலவு குறைந்த தொழில்நுட்பங்களை கடைபிடித்து உற்பத்தியை பெருக்குதல்
இடுபொருள் கூட்டாக கொள்முதல் செய்தல் மற்றும் விளை பொருள் கூட்டு விற்பனை உழவர் ஆர்வலர் குழு மற்றும் உழவர் உற்பத்தியாளர் குழு அமைத்தல் விளைபொருள் விற்பனை மற்றும் கடன் தேவைகளில் ஏற்படும் தடைகளைக் களைதல் உழவர் உற்பத்தியாளர் குழுக்களை பதிவு செய்தல் மற்றும் வேளாண் இயந்திரங்கள் ரூ.5இலட்சம் மதிப்பில் வழங்கி பொருளாதார மேம்பாடு அடைய உதவி செய்தல்
நீடித்த நிலையான மானாவாரி இயக்கம்
சிறுதானியம், பயறு, எண்ணெய்வித்து, பருத்தி, மானாவாரி சாகுபடியில் நீடித்த நிலையான உற்பத்தி அடைய வழிவகை செய்தல் 1000 எக்டர் கொண்ட ஒரு தொகுப்பு தேர்வு செய்தல் கோடை உழவு
உழவியல் பணிகள் உயிர் உரம், நுண்சத்து வழங்குதல் நுழைவு முகப்பு பணி – தடுப்பணை அமைத்து நிலத்தடி நீர் மட்டம் உயர்த்துதல் மதிப்பு கூட்டிய பொருள் தயாரிக்க தேவையான கருவிகள் வழங்குதல்
வேளாண் இயந்திர வாடகை மையம் அமைத்தல்
தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் :
பொதுவான வளர்ச்சிக்கான செயல் திட்டம் மூலம் அனைத்து துறைகள் மூலம் விவசாயிகளுக்கு ஒட்டு மொத்த உற்பத்தித் திறனை அதிகப்படுத்துதல் உற்பத்தித் திறனை அதிகரிக்க சான்று விதை, பவர் டில்லர் , பசுந்தாள் உரம் மானிய விலையில் வழங்கப்படுகிறது.மாவட்டத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு திட்டமிடுதல் இருக்கக்கூடிய வளங்களை தேவையான அளவு பயன்படுத்தி, வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட திட்டமிடுதல்
ஒட்டுமொத்த உற்பத்திக்குத் தேவையான திட்டங்களை வகுத்து செயல்படுத்ததுதல்
பயிர் உற்பத்தி திறனை அதிகாpத்திட நடைமுறைப்படுத்தக்கூடிய செயல் திட்டம் வகுத்து விவசாயிகளுக்கு உதவிடுதல்
தேசிய நீடித்த நிலையான மானாவாரி இயக்கம்
ஒருங்கிணைந்த பண்ணையம் திட்டத்தினை செயல்படுத்திட விவசாயிகளுக்கு உதவிடுதல் 100 எக்டர் தொகுப்பு அடிப்படையில் பயிர் செயல் விளக்கம் வருடம் முழுவதும் விவசாயிகளுக்கு வருமானம் கிடைத்திட வழிசெய்தல் பயிர் இழப்பீடு ஏற்பட்டாலும், கறவைமாடு, மண்புழு உரம் வருமானம் மூலம் வாழ்வாதாரம் மேம்படுத்துதல் மண்வளம் மேம்படுத்திட வழிசெய்தல்
தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம்
மாவட்டத்தில் குறிப்பிட்ட வட்டாரங்களில் நிலையான பயறு உற்பத்தி மற்றும் உற்பத்தி திறன் அதிகரிக்க வழிசெய்தல் மண்வளத்தினை மேம்படுத்துதல் மூலம் ஒவ்வொரு விவசாயியின் உற்பத்தி திறனை அதிகரித்தல் புதிய தொழில்நுடபங்கள் கடைபிடிக்க விழிப்புணர்வு ஏற்படுத்துதல்
தொகுப்பு செயல் விளக்க திடல் அமைத்திடத் தேவையான இடுபொருட்களை விதை, பயிர் பாதுகாப்பு மருந்து மற்றும் வேளாண் கருவிகள் மானிய விலையில் வழங்குதல் நீர்கடத்தும் குழாய் மூலம் பாசனம் மேற்கொள்வதன் மூலம் இருக்கும் நீரை சிக்கனமாக பயன்படுத்துதல்
(மேலும் விபரங்களுக்கு https://www.nfsm.gov.in )
பிரதான் மந்திரி நுண்ணீர் பாசனத் திட்டம்
ஒவ்வொரு துளியிலும் அதிக வருமானம் கிடைத்திடவும், உற்பத்தியை பெருக்கிடவும் உதவிடுதல்
சொட்டுநீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம், நீர்த்தூவான் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்குதல்
(மேலும் விபரங்களுக்கு http://www.tnhorticulture.tn.gov.in )
மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்பு திட்டம் – அட்மா
வேளாண் தொழில்நுட்ப செய்திகள் விவசாயிகளுக்கு வழங்குதல் வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த துறைகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிலையங்களுடன் ஒருங்கிணைத்து விவசாயிகளுக்கு தொழில்நுட்ப செய்தி வழங்குதல் ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கம் இரண்டையும் ஒருங்கிணைத்து நாள்தோறும் வேளாண் தொழில்நுட்ப பணியினை மேலாண்மை செய்தல்
பதிவு பெற்ற நிறுவனமான அட்மாவிற்கு பெறப்படும் நிதியானது முறையாக ஒப்பந்தம் மூலம் செலவிடப்பட்டடு பதிவேடுகள் பராமரித்தல்.செயல்விளக்கம், பயிற்சி, பட்டறிவு பயணம் மேற்கொள்ளுதல்
மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை
இயற்கை வள மேம்பாட்டு பணி மூலம் மேற்கொள்ளும் திட்டங்கள்
- தடுப்பணை
- பண்ணைக்குட்டை
- வடிமுனைக்குட்டை
- கசிவுநீர்க்குட்டை
- தூர்ந்த கிணறுகளை புனரமைத்தல்
பண்ணை உற்பத்தி திட்டம்
வாழ்வாதார பணிகள்
(மேலும் விபரங்களுக்கு www.tawdeva.in )
அலுவலக முகவரி
வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம்,
18. கண்மாய் மேலத்தெரு தல்லாகுளம், மதுரை – 2
தொலைபேசி : 0452 – 2537153
இமெயில் : jdagrimdu@gmail[dot]com